மகேஸ் பொய்யாமொழி வெற்றிக்காக பாடுபடப் போவதாக அறிவித்த பாஜக நிர்வாகிகள். திருவெறும்பூர் தொகுதியில் பரபரப்பு
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்:

திருவெறும்பூர் தொகுதி தேர்தல் களம் அதிரடி:
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திருவெறும்பூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாஜகவின் கீழ் கண்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்:
கோகுல் – திருவெறும்பூர் நகர் மண்டல் பொதுச் செயலாளர்.
இலக்கியா மதி – திருவெறும்பூர் நகர் மண்டல் கிளைத் தலைவர்.
தீபக் ராஜ் – திருவெறும்பூர் நகர் மண்டல் கிளைத் தலைவர்.
”கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக” இணைந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முறைப்படி கட்சிக்கு வரவேற்றார். தேர்தல் நெருங்கும் வேளையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைத்தது அந்த தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

