கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளியில் கடந்த 5ஆம்தேதி முதல் 9ம் தேதி வரை என்.சி.சி முகாம் நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு மாணவியை என்சிசி பயிற்சியாளரும் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் முகாமிற்கு வந்துள்ள 13 மாணவிகள் பாலியல் தொந்தரவு உள்ளாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே பாதிக்கப்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும் குற்றம் நடந்தது தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர், உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்படியான நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.
மேலும் காவல்துறை அதிகாரி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு பலனாக குழு ஒன்றும் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்து பேசி அவர்களின் நலன் காத்திட சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ மற்றும் புலனாய்வு குழுவின் தலைவரும் காவல்துறை அதிகாரியான பவானீஸ்வரி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று வேறு சம்பவங்கள் நடைபெற்று இருந்தால் அதை கண்டுபிடித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம்” எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சிவராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பவானீஸ்வரி, “நாங்கள் சிவராமன் கைது செய்வதற்கு முன்பு அவர் தற்கொலைக்கு முயன்றார், மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை பெற்று சிகிச்சை அளித்து வந்தோம்” என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வழக்கில் கைதாகி உயிரிழந்த சிவராமனின் தந்தை காவேரிப்பட்டினம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.