திருச்சி மன்னார்புரத்தில் நள்ளிரவில் ஆம்னி பஸ் திடீரென தீ பற்றி எரிந்து நாசம். 27 பேர் உயிர் தப்பினர் .
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரவு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்தபோது பேருந்து டயர் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக கீழே இறக்கி விடப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.
பேருந்து தீப்பிடித்த சில வினாடியில் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக 27 பேரும் உயிர் தப்பினர்.
பின்னர், மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனால் திருச்சி மன்னார்புரம் பகுதியில் நள்ளிரவு பரபரப்பாக காணப்பட்டது .