தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர்கள். 2021ல் பால் சந்திரமோகன் , இப்போது மாணவியை படுக்கையறைக்கு அழைத்த தமிழ்ச்செல்வன் . நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போர்க்கொடி .
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த பேராசிரியர்:
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த பேராசிரியர் தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மாணவர்கள் போர்க்கொடி எடுத்துள்ளனர் .
மேலும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
இந்த நிலையில் பேராசிரியர் தமிழ்செல்வனை பிஷப்ஹீபர் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும் கல்லூரி மாணவியை உடலுறவுக்கு அழைத்த பேராசிரியர் தங்க தமிழ்ச்செல்வன் மீது சமூக நலத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்களின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே கல்லூரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் துறை தலைவர் பால் சந்திரமோகன், மற்றும் பேராசிரியர் நளினி ஆகியோர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .