Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று ரயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பாதுகாப்பு குழு ஒத்திகை தத்ரூபமாக நடைபெற்றது.

0

 

திருச்சியில் இன்று ரயில் விபத்துகளின் போது
மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பாதுகாப்பு குழு ஒத்திகை தத்ரூபமாக நடைபெற்றது.

ரயில் விபத்துகளின் போது மீட்புக்குழுவினர் எவ்வாறு துரித செயல்பாடுகின்றனர்,
மீட்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புக் குழுவினர் செயல்விளக்கம் நடத்தி காட்டினர்.

திருச்சி ,
முதலியார் சத்திரம், குட்ஷெட் யார்டில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக ஒரு ஏசி மற்றும் 2 பொது பெட்டிகள் என 3 பெட்டிகள் கவிழ்க்கப்பட்டது.
இதை விபத்தாகக் கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.
உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேனுடன் கூடிய விபத்து,
மீட்பு ரயில்
ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து குட் ஷெட்டு யார்டுக்கு கொண்டு வரப்பட்டது.

திருச்சி ரயில்வே கோட்ட மேளாளர் அன்பழகன்,
திருச்சி கோட்ட பாதுகாப்பு பிரிவு முதுநிலை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில்
மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 50க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.

விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து ஒத்திகை
தத்துரூபமாக நடத்தி காட்டப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர்

Leave A Reply

Your email address will not be published.