Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்.2021ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார், 24 ல் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என துல்லியமாக கணித்த புகழ்பெற்ற நாடி ஜோதிடர் கணிப்பு.

0

'- Advertisement -

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற மகா சிவ நாடி ஜோதிடம் தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

Ad banner

2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், 2024-ல் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் துல்லியமாகக் கணித்த அதே மகா சிவ நாடி ஜோதிடர் சிவசாமி, தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து அதிரடியான ஒரு ஆருடத்தை வெளியிட்டுள்ளார். ஓலைச்சுவடியில் உள்ள பாடல் வடிவிலான தகவலின்படி, “சிவனின் இளைய மகன்” (முருகன்) பெயர் கொண்ட நபர், நல்லவர்களின் துணையோடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உதவியுடன், பழனிசாமி (முருகனின் தலம்) மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பு என ஆருண்ட காண்டத்தில் மிகத் தெளிவாக உள்ளது என அவர் கூறியிருப்பது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளால் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் அரசியல் கட்சியினரிடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.