Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு தலைவி ஆபாசமாக திட்டியதால் மனம் உடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை .

0

 

திருச்சி மணல்வாரி ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 31) தனியார் வங்கியில் கடன் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யா (21). திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகின்றது .

வித்யாவின் தாயார் பென்னச்சி, இவரது வீடு கீழப்புதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது .

தினமும் கணவன் வேலைக்குச் சென்று பின் தாயார் வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவாராம் நித்யா .

இந்நிலையில் வித்யாவின் சகோதரர்கள் இரண்டு பேருக்கு மல்லிகை புரத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு தலைவி மீனா என்பவரிடம் கடன் பெற்று கொடுத்துள்ளார் . சரியான தேதிக்கு பணம் கொடுக்காவிட்டால் குழு தலைவி மீனா பெண்களை ஆபாசமாகவும் அருவருக்க தக்க வகையிலும் மிகவும் தரக்குறைவாக பேசுவாராம் .

இந்நிலையில் நேற்றைய தேதியில் நித்தியாவின் சகோதரர்கள் குழு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது.

இன்று காலை தனது தாயார் வீட்டில் தனியாக இருந்தபோது குழுத்தலைவி மீனா நித்யாவை பலரின் முன்  மிகவும் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்.

இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த நித்தியா தனது தாயார் வீட்டில் உள்ள கழிவறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு இறந்துள்ளார் .

எப்போதும் போல் மதியம் மனைவிக்கு போன் செய்து எடுக்காததால் சந்தேகம் அடைந்த கணவன் நாகராஜ் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்பொழுது வீடு சாத்தப்பட்டு இருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை என அக்கம் பக்கத்தில் அரை மணி நேரமாக தேடி உள்ளார் . எதார்த்தமாக கழிவறை சென்று கதவை திறந்து உள்ளே பார்த்தபோது தனது மனைவி கழிவறையில் தூக்கு போட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . உடனடியாக திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் .

தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் உடனடியாக சம்பவ இடம் சென்று நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளே ஆகி உள்ளதால் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள நித்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து பாலக்கரை பகுதிகளில் குழுவில் பணம் வாங்கிய பெண்களை இழிவாக பேசி வரும் குழு தலைவி மீனாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.