திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 530 போலீஸ் அதிகாரிகளுக்கு
கைதுப்பாக்கிகளை கையாளும் பயிற்சி.
தமிழக காவல்துறை ஏ.டி. ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் (சட்டம்-ஒழுங்கு) உத்தரவின்பேரில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மேற்பார்வையில், திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை கையாளும் பயிற்சி மற்றும் வாராந்திர கவாத்து பயிற்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகரில் உள்ள சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம், குற்றப்பிரிவு போலீஸ் நிலையம், மாநகர ஆயுதப்படை அதிகாரிகள் என மொத்தம் சுமார் 530 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 46 போலீஸ் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை எப்படி கையாளுவது, துப்பாக்கிகளின் உதிரி பாகங்களை தனிதனியாக பிரித்தும், மீண்டும் துப்பாக்கிகளை ஒன்றினைத்து, அவற்றை பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் போலீசார் வாரந்திர கவாத்து மேற்கொண்டனர்.
மேற்கண்ட பயிற்சியில் உதவி கமிஷ்னர்கள், அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் கலந்துக்கொண்டார்கள்.
மேலும் பயிற்சியின் போது காவல் துணை கமிஷ்னர்கள் வடக்கு, தெற்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை கமிஷ்னர் (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர்.