Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம். சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

திருச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம். சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது.

திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் வருடம் தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நிகழ்வில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி தொடர் சிகிச்சை முறைகள் மூலம் எவ்வாறு மீண்டனர் என்று நம்பிக்கை தரும் விதமாக நேரடியாக வழங்கி வருகின்றனர் .

Suresh

அதேபோல் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி திருச்சி இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்றது. சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கிராமாலயா நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன்,
ஐ எம் ஏ முன்னாள் தேசிய துணை தலைவர் டாக்டர் அஷ்ரப்,ஜமால் முகமது கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் ஜமால் முகமது ஜாபர், ஆர்த்தோ கேர் நிர்வாக இயக்குனர் முகேஷ் மோகன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம் கின்னஸ் சாதனையாளர் டான்சென் மற்றும் விஜய் டிவி கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .விழாவில் சில்வர் லைன் ஹெல்த் கேர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் செந்தில் குமார் , டிரஸ்டி ,கணேசன் மருத்துவர்கள் ஹேமலதா, நரேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வில் புற்றுநோய் சிகிச்சை பெற்று எழுச்சி பெற்ற கேன்சர் நோயாளிகள் பலரும் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிர்வாக இயக்குனர் மற்றும் டாக்டர் செந்தில்குமார் பேசும்பொழுது பல ஆண்டுகால கடும் உழைப்பை செலுத்தி அர்ப்பணிப்போடு பணியாற்றி புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளாகிவிட்டோம் என்ற நோயாளி மனக்கவலை மற்றும் அவரது குடும்பத்தினர் போதுமான ஆதரவற்ற சூழலும் இதற்கு தீர்க்க முடியாத சிக்கலாக நீடித்தது. மருத்துவ துறையில் வெள்ளமென பாய்ச்சப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளும் துறை சார் மருத்துவரின் பங்களிப்போடு சிறந்த முறையில் பல மேம்பாடுகளை கண்டிருக்கிறது .மன தைரியத்துடன் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் வெற்றிகரமாக புற்றுநோயிலிருந்து மீண்டு விடலாம் கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு பேர் புற்றுநோயிலிருந்து மீண்டு இருக்கின்றனர். புதுவாழ்வை தொடங்கி இருக்கின்றனர். அவசியமற்ற அச்சம்தான் புற்றுநோய் எதிர்கொள்வதில் முதல் தடையாக அமைந்திருக்கிறது.

அத்தடையை தாண்டி நான் மட்டுமே முழுமையான தீர்வை வழங்கக்கூடிய தொடர் மருத்துவ சிகிச்சை முறைகள் கைக்கூடும் கேன்சர் நோயின் கொடுமைகளுக்கு ஆளாகி அந் நோயிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் உழலும் நோயாளிகளுக்கு மன வலிமையை வழங்கும் விதமாக சில்வர் லைன் மருத்துவக் குழுவின் தொடர் மருத்துவ சிகிச்சை முறைகளும் மற்றும் இதுபோல நிகழ்ச்சிகளும் பேருதவி செய்யும் என்று பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.