
திருச்சியில்
போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்துது சென்றனர். அப்போது பழைய ரயில்வே குட்செட் ரோடு கிரவுண்ட் பகுதியில் சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் போதை மாத்திரைகள் உட்கொண்டதும், அவரிடம் 90 மாத்திரைகள் இருந்ததும் தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஜாமீனில் விட்டனர்.