திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நேரு சிலைக்கு மாலை அறிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேரு சிலைக்கு மாலை
மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின்
நினைவு தினத்தை முன்னிட்டு கண்டோன்மெண்ட் பகுதியில் சேவா சங்கம் அருகில்உள்ள அவரது உருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் சோபியா விமலா ராணி,ஓ.பி.சி.பிரிவு மாநில செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம்
மாவட்ட பொதுச் செயலாளர்
உறந்தை செல்வம்,
பொருளாளர் முரளிதரன், மாவட்ட
கோட்டத் தலைவர்கள்
ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல் ,அண்ணாதுரை ,உறையூர் கிருஷ்ணா, மாணவரணி மாவட்டத் தலைவர் நரேன், ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் பாண்டியன், அமைப்புசாரா அணி மகேஸ்வரன், மாவட்ட செயலாளர் பட்டேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.