வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதவரி:
வெங்காயம் தேக்கமடைந்துள்ளதால்
கண்ணீர் விடும் திருச்சி
வியாபாரிகள்
வரியை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
நாம் அன்றாடம் சாப்பிடும் சட்னி முதல் சாம்பார் வரை வெங்காயத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

சிங்கப்பூர்,
மலேசியா,
இலங்கை உள்ளிட்ட
வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்று ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரியை
மத்திய அரசு விதித்துள்ளது விவசாயிகள்
கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
திருச்சி,தஞ்சாவூர் ரோடு பால்பண்ணையில் செயல்படும் வெங்காய மண்டியிலிருந்து திருச்சி, மட்டுமல்லாது
தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர்,
பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வரி விதிப்பு காரணமாக தற்போது வெங்காய விற்பனை மந்தமாகி தேக்க நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து வெங்காயதரகு வர்த்தக மண்டி உரிமையாளரும்,வெங்காய தரகு வர்த்தக மண்டி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளருமான தங்கராஜ் கூறுகையில்,
திருச்சி ,
வெங்காய வண்டிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காய வரத்து நாளொன்றுக்கு 400 முதல் 500 டன் ஆக இருந்தது.
இதே அளவில் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காய வரத்தும் இருந்தது.
தற்போது பெல்லாரி வரத்து அதே நிலை நீடிக்கிறது.
ஆனால் சின்ன வெங்காயத்திற்கு
தற்போது சீசன் இல்லை என்பதால் வரத்து 150 முதல் 2001 ஆக குறைந்துவிட்டது.
இதே நிலை ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும்.
தற்போது வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது அறுவடைக்கு இன்னும் இரண்டு மாத காலமாகும்.
வெங்காயத்தை பயிர் செய்த விவசாயிகள் இருப்பு வைத்து விற்பனை செய்தால் விலை அதிகரிக்கும் என்ற நோக்கில் ஒரு மாத காலமாக இருப்பு வைத்திருந்தனர். ஆனால் விலை அதிகரிக்கவில்லை அதன் எடைதான் குறைந்து விட்டது. எனவே இழப்பை சந்தித்துள்ளார்கள்.
மலேசியா,
சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்
வெங்காய ஏற்றுமதிக்கு
மத்திய 40% வரி விதித்துள்ளது.
கடந்த 15 நாட்களாக ஏற்றுமதி செய்யப்படவில்லை.
ஏற்றுமதி செய்ய 40 % வரித்தொகையை அரசுக்கு முன்கூட்டியே செலுத்த வேண்டியிருப்பதால் விவசாயிகள் வரியை செலுத்த இயலாத நிலை உள்ளது
மின்னணு சாதனங்களுக்கு கூட இந்த அளவுக்கு வரி இல்லை..
அழுகும் பொருளான வெங்காயத்திற்கு அரசு மத்திய அரசு வரி
விதித்துள்ளது கொடுமையானது. இனிவரும் காலங்களில் விவசாயிகள்
நெல், எள்,
பருப்பு,
வெங்காயம் உள்ளிட்ட எந்த வித உணவுப் பயிரும் பயிரிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது சின்ன வெங்காயம் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்கிறது இந்த விலையில் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகமல் நட்டத்தை சந்திப்பார்கள்.
விற்பனை வெகுவாக குறைந்துவிட்டதால்
வெங்காயம் மார்க்கெட்டில் தேக்கமடைந்துள்ளது.
எனவே மத்திய அரசு வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றார்.