மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த நலத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொள்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் குழுக்கள் அமைத்தல், இளைஞர், இளம்பெண்கள் பாசறை அமைத்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்தும், மகளீர் உரிமைதொகை எத்தனை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிற வெள்ளை அறிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிட வலியுறுத்தியும், மக்கள் நலனிற்காகவும், கட்சி வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபடும் அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமியுடன் என்றென்றும் துணை நிற்போம் என்றும் அம்மா அவர்கள் கொண்டு வந்த மக்கள் நலதிட்டங்களான தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம், இலவச மடிக்கணினி உள்ளிட்டவற்றை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்