Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டம்.

TVK ad

திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சேதுராபட்டி ஊராட்சி குஜிச்சியம்பட்டி செங்குளம் குளத்தில் கிராவல் மண் அள்ளியதால் சாலை மிகவும் குண்டும் குழியும் காட்சி அளிக்கிறது.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காலை அந்த வழியாக சென்ற 3 கிராவல் மண் லாரிகளை குஜிச்சியம்பட்டி செங்குளம் கிராம பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மணிகண்டம்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இருந்தபோதிலும் 3 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.