திருச்சி பாலக்கரையில்
தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது.
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கடையில் சோதனையிட்டார். அப்போது அங்கு 6.3 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு
அதனை பறிமுதல் செய்து அந்த கடையின் உரிமையாளர் செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை கைது செய்தனர்.