Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தந்தை பெரியார் கல்லூரியில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம்.

0

'- Advertisement -

 

Ad banner

தந்தை பெரியார் கல்லூரியில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம்.

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினிப் பயன் பாட்டியல் துறை மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து இலவச கண் மற்றும் பல் இலவச முகாம் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் பி.எஸ்.விஜயலட்சுமி தலைமை தாங்கினார் .

பாரதிதாசன் பல்கலைக் கழக யூத் ரெட் கிராஸ் மணடல ஒருங்கிணைப்பாளர் முனைவர் க வெற்றிவேல், இந்திய ரெட் கிராஸ் திருச்சி மாவட்டத் தலைவர் பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்தியன் வங்கிக் காலனியில் உள்ள ஆப்டிகல் சோன் கண் மருத்துவ நிபுணர் சகானாஸ் சித்திக் தலைமையிலான கண் மருத்துவக் குழு , உதயாரவி பல் மருத்துவமனை மருத்துவர் உதயபிரியா, தீன்சக்கரவர்த்தி தலைமையிலான பல் மருத்துவக் குழுவினர் 524 மாணவ- மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசோதனை செய்தனர். இன்று மீதியுள்ள மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை நடைபெற உள்ளது. முன்னதாகக் கணினி பயன் பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் கா.பாத்தீமா பீபி வரவேற்றார். யூத்
ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.குணசேகரன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.