Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிராப்பட்டி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி கிராப்பட்டி பகுதியில்
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெடுஞ்சாலை துறை நடவடிக்கை.

TVK ad

திருச்சி கிராப்பட்டி முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் இன்று அதிரடியாக அகற்றப்பட்டன.
நெடுஞ்சாலை துறை சார்பில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டது. அதன்படி இன்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதில் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த அதிரடியில் 30 கடைகள் மற்றும் சில வீடுகளின் முன் பகுதிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. எடமலைப்பட்டி புதூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, ​​ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

அதன்படி சிலர் தங்களது ஆக்கிரமிப்புகளை தாமாகவே அகற்றினர். அகற்றப்படாத பகுதிகளில் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. விரைவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கும் என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.