Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

9வது ப்ரோ கபடி லீக்.தமிழ்தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

0

'- Advertisement -

Ad banner

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் – யுபி யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் . 43 – 28 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் ப்ரோ கபடியில் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி தகுதி பெற்றது.

ஐந்து ஆண்டுகளாக புரோ கபடியில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது மிகப் பெரிய முன்னேற்றம் ஆகும்.ஒவ்வொரு சீசனியிலும் 5 அல்லது 6 வெற்றிகள் மட்டுமே பெற்று தொடரிலிருந்து வெளியேறியது.
ஆனால் ப்ரோ கபடி சீசன் 9ல் 10 வெற்றிகள் பெற்று முதன்முறையாக குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது தமிழ் தலைவாஸ் அணி.

கபடியை அறிமுகப்படுத்திய தமிழகம் அந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே உலகு எங்கும் உள்ள தமிழர்களின் ஆவல்…

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.