Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (21-03-2022) ராசி பலன்கள்

0

இன்றைய (21-03-2022) ராசி பலன்கள்

 

மேஷம்

நீண்ட நாட்களாக செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : தாமதங்கள் நீங்கும்.

பரணி : அனுபவம் மேம்படும்.

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
—————————————

ரிஷபம்

எதிர்பாராத தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.

மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
—————————————

மிதுனம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

கடகம்

வீடு கட்டுவது தொடர்பான எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய முயற்சிகள் அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : உதவி கிடைக்கும்.

பூசம் : லாபகரமான நாள்.

ஆயில்யம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
—————————————

சிம்மம்

மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : தன்னம்பிக்கை மேம்படும்.

பூரம் : பாராட்டுகள் கிடைக்கும்.

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
—————————————

கன்னி

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் குழப்பமும், தனம் தொடர்பான நெருக்கடிகளும் ஏற்படலாம். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : விருப்பம் நிறைவேறும்.

அஸ்தம் : அறிமுகம் ஏற்படும்.

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————

துலாம்

தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். நிதானம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.

சுவாதி : மதிப்பு அதிகரிக்கும்.

விசாகம் : மாற்றம் ஏற்படும்.
—————————————

விருச்சிகம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். கனிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : நெருக்கடியான நாள்.

அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.

கேட்டை : ஆதாயம் மேம்படும்.
—————————————

தனுசு

உயர்கல்வி தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.

பூராடம் : லாபகரமான நாள்.

உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
—————————————

மகரம்

அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கால்நடைகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். விருப்பம் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.

அவிட்டம் : மேன்மையான நாள்.
—————————————

கும்பம்

எண்ணிய பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். தந்தை வழியில் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

சதயம் : நன்மையான நாள்.

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————

மீனம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

ரேவதி : பொறுமை வேண்டும்.
—————————————

Leave A Reply

Your email address will not be published.