திருச்சியில் உயிரைப் பணயம் வைத்து நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்து அது கவரிங் என்றவுடன் ஏமாந்தது திருடன் ….
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் திடீரென நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
உயிரை பணயமாக வைத்து சங்கிலியை பறித்து சென்ற பின் சோதித்துப் பார்த்த அந்தத் திருடனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது; அது தங்கச் சங்கிலி அல்ல, வெறும் ‘கவரிங்’ நகை என்பது தெரியவந்தது
தங்கம் என்று ஏமாந்துபோன ஆத்திரத்திலும் அதிர்ச்சியிலும், அந்தத் திருடன் பறித்த நகையை அங்கேயே சாலையில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளான். இச்சம்பவம் குறித்த தகவலும், நெட்டிசன்களின் கலகலப்பான கமெண்ட்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிச் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.

