Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125வது ஆண்டு விழாநடைபெற்றது.

0

ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125ஆம் ஆண்டு விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராகவேந்திரன் முன்னிலை வகித்தார்.

பின்னர் மொட்டை மாடி இசை குழுவினரின் இசை நிகழ்ச்சியும், மாயாஜால நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் வரவேற்றார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இரண்டாம் நாளான நேற்று விழா மங்கள இசையுடன் தொடங்கியது.
தமிழ் தாய் வாழ்த்தை சுந்தரராஜன் பாடினார். விழாவில் ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி தலைவர் நந்தகுமார் தலைமை உரையாற்றினார். புதிய கட்டிடமான கொடியாலம் வாசுதேவன் பிளாக்கை பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.

பின்னர் ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி நிறுவனத்தலைவர் வீரராகவாச்சாரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி தனது சிறப்புரையில் பேசியதாவது: 125 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு பள்ளி தேவை என்று சிந்தித்து அதை ஏற்படுத்திய வீரராகவாச்சாரியாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு பள்ளியை கட்டுவதும் அதை பல ஆண்டுகள் உயிர்ப்போடு வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு கல்வி நிறுவனம் 125 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெறுகிறது என்றால் அதற்காக இப்பகுதியில் வாழும் மக்களையும், பள்ளி நிர்வாகிகளையும் பாராட்டுகின்றேன்.

இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். பேட்மிட்டனில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் இந்தியாவில் போற்றப்படுகிறது என்றால் அதற்கு காரணம் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தான். அந்த வகையில் இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு கடமை, உரிமை, அவசியம் இருக்கின்றது. இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினராக கலந்து கொள்வதை விட கல்வியாளராக கலந்து கொள்வதிலேயே பெருமை கொள்கிறேன்.

இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் வசதியில்லாத 5 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்பினால் அவர்களை பொறியியல், மற்ற துறைகளில் கல்வி கட்டணமின்றி, விடுதி கட்டணமின்றி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உயர் கல்வியை அளிக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கின்றேன் என்றார்.

விழாவில் சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன், ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி உப தலைவர் ரங்கசாமி, முன்னாள் மாணவர் பிரிகேடியர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் விழுதுகள் என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், சிந்திப்போம் சாதிப்போம் என்ற தலைப்பில் விசாகா ஹரியும் பேசினர். இதையடுத்து முகம்மது ஆசிக் மாஸ்டர் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி செயலாளர் கஸ்தூரி ரெங்கன் வரவேற்றார். முடிவில் நிர்வாகக் குழு உறுப்பினர் சத்தியபாமா நன்றி கூறினார்.விழா சுந்தர்ராஜனின் நாட்டுப் பண்ணுடன் முடிவுற்றது.

முன்னதாக ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொடியாலம் வாசுதேவன் பிளாக்கை பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த ப்ளாக் ரூ 1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாகும். இதில் கம்ப்யூட்டர் டிஜிட்டல் லேப் மற்றும் விஷுவல் ஹால் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 70 பேர் அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.