Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு.

0

'- Advertisement -

Ad banner

ஏரோ ஸ்கேட்டோபால்
போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு வரவேற்பு.

தேசிய அளவிலான 7-வது ஏரோ ஸ்கேட்டோபால்
விளையாட்டு போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில்
நடைபெற்றது. இந்த
விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு ஏரோ ஸ் கேட்டோபால் அசோசியன் சங்க தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில், 55 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு,
14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு,
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு,
18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் பிரிவு,
10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு,
14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு ஆகிய பிரிவுகள் அனைத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களே முதல் இடத்தை பிடித்தனர்,
தேசிய அளவில் தமிழ்நாடு மாணவர்கள் முதல் இடத்தையும், மகாராஷ்டிரா மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், ராஜஸ்தான் மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.
மெய் சிலிர்க்க வைக்க கூடிய வெற்றியினை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்று கோப்பையை கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களை திறம்பட பயிற்சி பெற செய்த அபுதாஹீர், அருள் பிரகாஷ், மற்றும் பாலன் மகேந்திரன் ஆகியோருடன் இணைந்து பெற்றோர்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் வெற்றி பெற்ற மாணவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கியும், தலைவர், பொதுச் செயலாளர் பிரவீன், ஜான்சன் ,பொருளாளர் தங்க முருகன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.