திருச்சி பொன்மலையில் ரயில்வே ஊழியர், குடும்ப தகராறில் தூக்கு மாட்டி தற்கொலை.
திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி வயது(வயது 47) ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது மகளான ரஞ்சனி 10 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரமணி மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரமணி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் நேற்று மாலை பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதியில் ரமணி முன்பு வசித்த பாழடைந்த ரயில்வே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து ரமணியின் மகள் ரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.