திருச்சியில் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி.
தொழிலாளிக்கு வலை.
திருச்சி தென்னூர் ரெஜிமெண்டல் பஜார் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 49) . திருமணமான இவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவரது மனைவி கல்பனாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கணவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சண்முகநாதன் மனைவி கல்பனாவை தகாத வார்த்தையால் திட்டி கையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.
இதுபற்றி கல்பனா தில்லை நகர் போலீசில் புகார் செய்தார்.
சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சண்முகநாதனை தேடி வருகிறார்.