திருச்சி தேமுதிக தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக பாரதிதாசன் நியமனம்.
திருச்சி தேமுதிக தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக பாரதிதாசன் நியமனம்.
மணப்பறையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் திருமண மஹாலில் தேமுதிக வின் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளர் பாரதிதாசனை அறிமுகம் செய்யும் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
புதிய மாவட்ட பொருப்பாளரை மணப்பாறை ஒன்றியச் செயலாளர் தொப்பம்பட்டி சரவணன் அறிமுகம் செய்துவைத்துப் பேசினர்.
இதில் வருகிற 27 ம் தேதி மணப்பாறைக்கு வருகைதரும் இளைய கேப்டன் விஜயபிரபாகரனை வரவேற்பது குறித்தும், வரவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எடுத்துக்கூறினர்.
கூட்டத்தில் புதிய பொருப்பாளர் பாரதிதாசன் கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்வது குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி குறித்தும் கட்சியினரிடையே பேசினார்.

அப்போது ஜாதிமதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி தேமுதிக மட்டுமே நாம் அனைவரும் கேப்டன் கட்சி என்றதால் கட்சியினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
புதிய மாவட்ட பொருப்பாளருக்கு கட்சியினர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாநில மாற்றுத்திறனாளிகள் அணி வாஞ்சிகுமரவேல், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் திருப்பதி, மாவட்டச் செயலாளர்கள் வசந்த்பெரியசாமி, வேல்முருகன், மணிதேவி, ஒன்றியச் செயலாளர்கள் வையம்பட்டி அர்ஜுணன், மருங்காபுரி சக்தி பெருமாள்ராஜ், அந்தநல்லூர் சஞ்சீவி காந்தி, சிறுகமணி பேருர் கழக செயலாளர்கள் பொன்னம்பட்டி ஹக்கிம், சிறுகமணி ஹரிதாஸ், நகர செயலாளர் கோவிந்தராஜ்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்பீட்டர், திராவிடமணி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி, மகளிரணி மாலதி, சூழியாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி நீலமேகம், முத்து பாலசுப்பிரமணியன், ஜெயபால்,
ஒன்றிய அவைத்தலைவர் சந்திரசேகர், நகர அவைத்தலைவர் பாலசந்திரன், மாவட்ட கேப்டன் மன்றம் கணேசன் மற்றும் நிர்வாகிகள் சின்னதுரை, சிங்காரவேல், ராமசாமி, வேலுச்சாமி, சின்னசாமி, சாகுல் அமீது, ஆரோக்கியதாஸ், ராஜப்பா, வெள்ளைச்சாமி, செல்வேந்திரன், பாண்டியன், கந்தசாமி
உள்பட திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என தேமுதிக வினர் திரளாக கலந்து கொண்டனர்.