Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை

0

'- Advertisement -

Ad banner

மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வு: 116 பேரின் பணி நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது ..

தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 57-ன் கீழ் மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, பிற 21 மாநகராட்சிகள், 143 நகராட்சிகள் இவை மூன்றும் முன்பு தனித்தனி விதிகளின் கீழ் இயங்கின. இதில் பொறியாளர்களுக்கு அந்தந்த அமைப்புகளுக்குள்ளேயே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் கடந்த 2023-ல் உருவாக்கப்பட்ட புதிய விதிகள், 2024 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தன. புதிய விதிகளின்படி, காலிப்பணியிடங்கள் மூன்று அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4 அன்று தமிழக அரசு 116 பேருக்குப் பதவி உயர்வு வழங்கியது. இதில் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 103 பேருக்கும், பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 13 பொறியாளர்களுக்கும் ( ஒட்டுமொத்த மாநகராட்சிகளில் 4 பேருக்கும், நகராட்சிகளில் 9 பேருக்கும்) பதவி உயர்வு கிடைத்தது.

ஒப்பீட்டளவில் சென்னையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு 3வது பதவி உயர்வும், பிற பகுதிகளில் 15 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு முதல் முறை பதவி உயர்வும் கிடைத்துள்ளது.

இதில் விகிதாச்சார முறை பின்பற்றப்படாததால், பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் இந்த பதவி உயர்வுகளுக்குத் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பொறியாளர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி மற்றும் நகராட்சி நிர்வாக அரசுச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் ஏற்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால், பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடையாணை பெற்றுள்ளனர்.

விரைவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான பதவி உயர்வு உத்தரவை வெளியிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.