திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில்:-
கோட்டை ஸ்டேஷன் (மாரிஸ் தியேட்டர்) வழியாக வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுமா…?
திருச்சி மாநகரில் ஆங்காங்கே நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளால் போக்குவரத்து நெரிசலில் திருச்சி மாநகரமே திக்குமுக்காடுகிறது.
இதில் பிரதான சாலையான கோட்டை ஸ்டேஷன் வழியாக கோஹினூர் தியேட்டர் செல்லும் பாதையை சீரமைக்கிறேன் என்ற பெயரில் பல மாதமாக அடைத்து வைத்துள்ளது திருச்சி மாநகராட்சி நிர்வாகம். இதனால் திருச்சி மாநகர பொதுமக்கள்,
குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2021 பிப்ரவரி மாதம் பெய்த சாதாரண மழை காரணமாக திருச்சி கோட்டை ஸ்டேஷன் மேம்பாலம் ஒரு பகுதி சரிந்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மேம்பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தது.
மேலும் கோட்டை ஸ்டேஷன் மேம்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு மிக பழமையானது என்பதோடு, மேம்பாலத்தை சீரமைப்பது கால மற்றும் பண விரையம் என மக்கள் நீதி மய்யம் சார்பாக சுட்டிகாட்டியிருந்தோம்.
மேலும் மேற்படி இடத்தில் புதிய இரயில்வே மேம்பாலமே எதிர்கால திருச்சி மாநகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகும் என கடந்த 2021 ஏப்ரல் மாதம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
மேலும் அதுவரை இரு சக்கர வாகன போக்குவரத்தை அனுமதித்த மாநகராட்சி நிர்வாகம். கடந்த 2021 ஏப்ரல் மாதம் முழுமையாக போக்குவரத்தை முடக்கியது.
மேலும் கோட்டை ஸ்டேஷன் மேம்பால பணியை துரிதப்படுத்துவதாக இதற்கு காரணம் கூறியது.
ஆனால் மேம்பால சீரமைப்பு பணி துவங்கி பல மாதங்கள் கடந்தும் இதுவரை முடிந்த பாடில்லை.
இதனால் உறையூர், தில்லைநகர் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படைந்திருக்கிறார்கள்.
மேலும் மேற்படி பகுதியில் போக்குவரத்து இல்லாததால் குற்ற செயல்கள் நடக்கும் கூடாரமாக மாற வாய்ப்புள்ளது.
எனவே திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பிரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி மாநகருக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் அவர்கள் உடனடியாக மக்கள் படும் இன்னல்களை தீர்க்கும் விதமாக கோட்டை ஸ்டேஷன் To கோஹினூர் தியேட்டர் வழியாக போக்குவரத்தை அனுமதிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்..
ஏன் திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தனது கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.