தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்ற திரும்பிய வீரர்களுக்கு தண்ணீர் அமைப்பினர் வரவேற்பு.
தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்க திருச்சியை சேர்ந்த அருண், சரவண குமார் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தேர்வு பெற்றனர் .
மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில், ஏழ்மையான குடும்பத்தை சாரந்த வீரர்கள் சாதனை படைக்க
பயணசெலவு தொகை உதவிகேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்பட பல நல்ல உள்ளங்கள் உதவி செய்தார்கள்.
அவர்கள் பூட்டான் நாட்டில் நடக்கும் இளைஞர்களுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 7, 8ம் தேதி நடந்த
போட்டியில் பங்கேற்று கபடியில் தங்கம், தடகளத்தில் வெள்ளி வென்று வந்த வீரர்களை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே. ராஜா, இளைஞர் அணி மணிவேல் அண்ணாதுரை, நிர்மல், ரெங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.