திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளி காசு
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தலைமை ஆசிரியர் புஷ்பலதா, தலைமையில் சிறப்பு விருந்திரையாக கவுன்சிர் முத்து செல்வம், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர், தண்ணீர் அமைப்பு செயல்தலைவர் கே.சி.நீலமேகம், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் இணைந்து சிறப்பு மேளம்,தாளம் பொம்மைகள் மனிதர்கள், ரோஜா பூ,இனிப்புகள் வழங்கி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர்கள்.

பள்ளிகளில் புதிதாக சேரும் ஒன்றாம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2 கிராம் வெள்ளிக்காசு, சிலேட்டு,பேக், வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டனர். 

இன்று முதல் வகுப்பு மாணவர்கள் 75 மாணவ மாணவிகள் சேர்ந்தார்கள்.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த முயற்சி முக்கிய பங்காற்றும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

