திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில்

குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது27) தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 23) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதியனர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 31ந் தேதி தனது குழந்தையுடன் செந்தாமரை வீட்டை விட்டு சென்றார் மீண்டும் வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து
பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி வரகனேரி கல் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது78) இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே சென்று சில நாட்களில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் , இந்த நிலையில் கடந்த 15 ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராதாகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

