மதக்கலவரத்தை தூண்டும் மனிதநேய மக்கள் கட்சியை தடை அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர் கோரிக்கை.
அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்டம் கண்டன அறிக்கை.
நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இவர்களுடைய மார்க்கத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு நபருக்கு இந்து மதத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறியீட்டினை ஒரு நபரின் உடல் முழுவதும் வரைந்து அவரை மற்றொரு நபர் இழுத்து வருவது போல சித்தரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இவர்களுடைய நோக்கம் என்ன அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று எண்ணம் வெளிப்படுகிறது.
இவர்களுடைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களுடைய எண்ணம் இந்துமதத்தில் ஆண்மகன்கள் இல்லை என்றா,
ஜனநாயக நாட்டில் இவர்களுக்கு மட்டும் தான் அடுத்த மதத்தை இழிவுபடுத்தும் உரிமை உள்ளதா ?அல்லது இந்து மதத்தையும் இந்து மக்களையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு இவர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனரா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
இவர்கள் தொடங்கிய இந்த மத உணர்வு கலவர ஆர்ப்பாட்டம் இவர்களுடைய கட்சித் தலைமைக்கு தெரியாமலா நடந்தது,அப்படித் தெரிந்து நடந்து இருந்தால் அவர்களுடைய நோக்கம் என்ன இவர்கள் எதை இந்த நாட்டு மக்களுக்கு பதிவு செய்ய விரும்புகிறார்கள் ?
இஸ்லாம் மதத்தை இழிவாக பேசினார் என்று கல்யாணராமன் ஜி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யச்சொல்லி போராடியவர்கள் இன்று நடுரோட்டில் இந்து மதத்தை இழிவு படுத்தி செய்த செயலுக்கு என்ன அர்த்தம் இவர்கள் மீது எந்த சட்டம் பாயும்.
இந்த ஆர்ப்பாட்டத்தை பார்க்கும் பொழுது மலபார் பிரச்சனை போல தமிழகத்திலும் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று ஐயம் எழுகிறது.
ஆகவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட இயக்கத்தின் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என அகில இந்திய இந்து மகாசபா கேட்டுக் கொள்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினர் ஏன் தடுக்கவில்லை?
அப்படி என்றால் காவல்துறையினரும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்களா என்ற ஐயம் உருவாகிறது.
இப்படியே போனால் இந்து மக்கள் தமிழ்நாட்டில் வாழ முடியாதா இதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு சாதாரணமான ஆர்ப்பாட்டமாக பார்க்காமல் வருங்காலத்தில் அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகம் கலவர பூமியாக மாறுவதற்கு உள்ள ஆதாரமாக கருத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு :
அகில இந்திய இந்து மகா சபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி.