இன்று திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் வாயிலில்
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் எம்.சரவணன் தலைமையில் பொதுமக்களிடம் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,
இந்தக் கடுமையான காலகட்டத்திலும் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை உயர்த்திய மோடி அரசை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல்தலைவர் டாக்டர். விஷ்ணுபிரசாத் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் ஜி. முரளி முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் 5வது வார்டு தலைவர் சக்தி, 16வது வார்டு தலைவர் சம்சுதீன், பொதுச்செயலாளர்கள் கள்ளிக்குடிகுமார் சிந்தாமணி விக்டர் .
மற்றும் பஜார் மொய்தீன், நிர்மல்குமார், திம்மை செந்தில்குமார்,மகளிரணி அஞ்சு, கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, சண்முகம், மன்சூர் அலிகான், நரேந்திரன், ஸ்ரீ ராகவேந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.