ஒன்றிய அரசு என்பது தவறானது இந்திய அரசு என்று அரசாணை வெளியிட பாரத பிரதமருக்கு முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை
மத்திய அரசை ஒன்றிW அரசு என்பது தவறானது, இந்திய அரசு என்று அரசாணை வெளியிட பாரத பிரதமருக்கு திருச்சி முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை கடிதம் :
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து மத்திய அரசை இந்திய அரசு என்றும் பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களில் உள்ளது ஆதார வரலாற்று சான்று உள்ளதாகும்.
புதியதாக ஒன்றிய அரசு என்று சில அரசியல் கட்சியினர் அழைப்பது ஏற்புடையது அல்ல. இது மத்திய அரசை அவதூறு படுத்துவதாகும். இந்திய மக்களுக்கு தேச பக்தியை சீர்குலைக்கப்படுவதாகும்.
ஒன்றிய அரசு என்பது யூனியன் பிரதேசங்களை குறிப்பதாகும். ஒரு மாநிலத்தில் உள்ள அந்த மாவட்டத்துக் உட்பட்ட பகுதிக்குத் தான் ஒன்றியம் என்று பெயர்.
இதனை மத்திய அரசுக்கு ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறானது,
எனவே இந்திய அரசை மத்திய அரசினை “ஒன்றிய அரசு” என்று தமிழக சட்ட மன்றத்தில் 23.06.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைக்கலாம். என்று விளக்கம் அளித்தது
இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
இதனை உடனடியாக கலைய உரிய நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சரும், பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களும் இறையாண்மையை பாதுகாக்கவும், மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்பதை உடனடியாக மாற்றிட அரசாணை வெளியிடவும்,
அப்படி அழைப்பது இந்திய நாட்டிற்கு அவதூறு பரப்பும் வன்ம செயலாகும் என்பதனை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்திய குடிமகனாகிய நான் கோரிக்கை வைக்கிறேன்.
என திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரும், சட்ட தன் ஆர்வலருமான முனைவர் டாக்டர் பா.ஜான் ராஜ்குமார் பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.