மாநில அளவிலான இலவச ஆன்லைன் சிலம்பப் போட்டி நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்பு கலை கூடம் இணைந்து நடத்திய 1080 பேர் கலந்துகொண்ட மாபெரும் மாநில அளவிலான ஆன்லைன் இலவச சிலம்பப் போட்டி நடைபெற்றது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற சிலம்ப போட்டிக்கான முடிவு வெளியிடப்பட்டது.
இந்த சிலம்ப போட்டியானது மழலையர்,மினி சப் ஜூனியர் ,சப் ஜூனியர், ஜூனியர்,சீனியர்,சூப்பர் சீனியர் என 6 பிரிவுகளில் நடைபெற்றது.
இந்த சிலம்பப் போட்டியில் திருச்சி திருவெரும்பூரை சேர்ந்த காமேஸ்வரன், மணிகண்டன், யோகேஸ்வரி, உதய பிரகாஷ், மனோஜ் குமார், ஜெயஸ்ரீ ,சந்தியா,
ஹரிஹரசுதன், யாஷவேணி, நிவாஸ்,சரனேஷ், மற்றும் அரவிந்த் முதல் பரிசும்
கிரிஸ்டா ராணி,கிசன்,ஹரி பிரசாத், வினோ தீபா,சுமித்ரா, பிரவீன், ஜாவித், கெஜ பிரியா,அபிராமி,ஷாலினி, துரை கிருஷ்ணன் மற்றும் பரத் பாண்டி இரண்டாம் பரிசும்
சிவ பிரியன், ஹர்ஷித், பிதீத்தா ,ஷர்மிலி, கார்த்திகேயன், ரதீஷ் வரன், யுதாஜித் ,தருண் சுப்பிரமணியன்,ஆதித்யா, ஜாஸ்லி,பாண்டி மீனா துளசி, மற்றும் தனலட்சுமி மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர்
இந்த கொரோனா காலகட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை கையிலெடுத்து தங்களின் தனித்திறமைகளை வீடியோக்களின் மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வு இந்திய உலக சாதனை புத்தகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போட்டிகளின் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் தபால்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிலம்ப போட்டிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி வளர்மதி மற்றும் சிலம்ப பயிற்சியாளர் காவலர் அரவிந்த் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.