கோவக்காய் சட்னி
கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். கோவக்காய் உடல் சு+ட்டைத் தணிக்கும் ஆற்றல் உடையது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள் :
கோவக்காய் – கால் கிலோ
வெங்காயம் – 5
பு+ண்டு பல் – 4
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 3
தனியா – 1 டேபிள் ஸ்பு+ன்
வெந்தயம் – 1 டீஸ்பு+ன்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பு+ன்
செய்முறை
வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பு+ண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார்.