பீகார் மாநிலம் ஹாஜிபுரில் சதார் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் தனியார் வங்கியின் ஜதுஹா கிளை உள்ளது.
மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயின் வீடும் அருகில்தான் உள்ளது.
நேற்று காலை பட்டப்பகலில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய மர்ம மனிதர்கள் வங்கிக்குள் புகுந்து பண அறைக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி
ரூ.1.19 கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

சுமார் 5 பேர் கொண்ட கும்பல் அது என்று கூறப்படுகிறது
தகவல் கிடைத்ததும் மாவட்ட கண்காணிப்பாளர் வைஷாலி தலைமையிலான காவல்துறையினர் வங்கியை முற்றுகையிடுவதற்குள் கொள்ளையடித்த பணத்துடன் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாமல் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம், முசாபர்நகரில் ஆயுதமேந்திய இருவர் வங்கியில் ரூ.65,000 கொள்ளையடித்தனர்.