தற்போது தமிழகமெங்கும் கொரோனா பரவல் காரணமாக 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கும்,, மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கும் அமுலில் உள்ளது.
தளர்வுகள் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், டீக்கடைகள் தவிர்த்து மற்ற ஹோட்டல்கள் பார்சல் மட்டும் ) மளிகை கடைகள்,, காய்கறி கடைகள் போன்று அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தினக்கூலிகளாக ஹோட்டல்களில், சினிமா தியேட்டர், பெரிய ஜவுளி நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்த நிலையில்
தங்கள் குடும்பத்தை காப்பாற்ற மாற்று வியாபாரமாக தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்வது, பால் பாக்கெட் போடுவது, தண்ணீர் கேன் விற்பனை, இருசக்கர வாகனத்தில் டீ கேன்களில் கொண்டுவந்து ஒவ்வொரு இடமாக சென்று விற்பனை செய்வது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் இன்று டிவிஎஸ் டோல்கேட் அருகே ஒரு நபர் நின்று தனது இருசக்கர வாகனத்தில் வைத்து டீ கேனில் சாலையோரம் சென்றவர்களுக்கு டீ விற்பனை செய்து வந்ந்தார்.

அங்கு ரோந்து வந்த கேகே நகர் காவல் துறை ஆய்வாளர் டீ விற்க மாநகராட்சியில் அனுமதி வாங்கி உள்ளாயா எனக்கேட்டு ஊரடங்கு விதிமுறையை மீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி ரூ.5000 அபராதம் விதித்து உள்ளார்.
டீ விற்ற நபரோ ஒரு நாள் முழுவதும் டீ வியாபாரம் நடந்தால் கூட500 ரூபாய் கிடைக்காது அபராதம் ரூ. 5000 மா எனக் கேட்டு கண்ணீர் வடித்தார்.
தற்போது திறந்து உள்ள காய்கறி, மீன், சிக்கன், மளிகை கடைகளில் எங்கும் இடைவெளி கடைபிடிப்பதில்லை,
அங்கெல்லாம் எதையும் கண்டுகொள்ளாத கேகே நகர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் சாதாரண கேனில் டீ விற்கும் நபரிடம் கறாராக ரூ.5000 அபராதம் விதித்த தாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.