மாநிலம் முழுவதும் 46 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக ஆர்.பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி. ஆக சண்முகப்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக கிங்ஸ்லின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. ஆக எஸ்.சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.