மேற்கு வங்க பாஜக தலைவரும் அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு.
கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள மெதினிபூர் மாவட்டத்தின் உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
நகராட்சி நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளரை மோசடி வழக்கில் கொல்கத்தா போலீசார் நேற்று கைது செய்த நிலையில் இன்று சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பரில் பாஜகவில் இணைந்தார்.
மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி அவரை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.