திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்காலில் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ள நிலையில் தண்ணீர் தேங்கி கழிவுநீர் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அச்சத்தையும் ஏற்பட்டுத்தி உள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மாநகராட்சிக்கு கோட்டை வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்தார்..
சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை ஏற்பு திருச்சி மாநகராட்சி உடனடியாக வாய்க்காலை பணியினை மேற்கொண்டு வருகிறது.
தூர்வாரும் பணியினை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு செய்து மழை நேரத்தில் கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் ஆழமாகவும் சுத்தமாகவும் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், திமுக பகுதிச்செயலாளர் மலைக்கோட்டை மதிவாணன் மற்றும் திமுக தொண்டர்கள் உடன் இருந்தனர்