திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மத நல்லிணக்க விழா. சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் விழா நடைபெற்றது.

விழாவில் ஹஜ் பயணம் மேற்க்கொள்ளும் தொழில் அதிபர் சையத் இப்ராஹிம் க்கு இந்து மற்றும் கிறிஸ்துவ நண்பர்கள் வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மூத்த உறுப்பினர் வைத்தியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சுந்தரராஜ் நகர் சுந்தர விநாயகர் கோயில் தலைமை குருக்கள் ராஜ்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.
முன்னாள் குழந்தை நலக் கமிட்டி உறுப்பினர் மருத்துவர் வி.எம். ஞானவேலு, ஜான் பிரிட்டோ சர்ச் நிதிச் செயலர் சார்ல்ஸ் டபேராசிரியர் பிரான்சிஸ் லியோ, சமூக ஆர்வலர்கள் டில்லி ராஜன் மற்றும் எம் ஜி சலீம் பாஷா
சமய நல்லிணக்கத்தை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வாழ்த்தி பேசினர்.
முடிவில் நகர் நல சங்கத்தின் செயலாளர் துரை செந்தில்குமார் நன்றி கூறினார்.

