கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும்.
பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரனோ தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.