திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொரோனா ஊரடங்கு ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து தங்களின் தொண்டு நிறுவனத்தின் சார்பாக அவசர ரத்த தானம், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களுடன் எவ்வாறு உதவித்தொகை, அவசர மருத்துவ உதவி மற்றும் சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு தினந்தோறும் உணவளித்தல் போன்ற சமூக நல மனிதநேயப் பணிகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக அரசுடன் சேர்ந்து நிவாரண பணிகளை செய்ய அழைப்பு விடுத்ததின் அடிப்படையில் இன்று
நான்காம் கட்ட நிவாரண பணியாக சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியினை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீமநகர் ரபிக், மாநில செயலாளர் அப்பாஸ் அலி, மாநில பொருளாளர் பகுருதீன்,
இர்பான், அன்சார் திருச்சி மாவட்ட தலைவர் சாதிக் மாவட்ட செயலாளர் ஷேக் மைதீன், மாவட்ட பொருளாளர் ஷாஹீன், முஸ்தபா சதகதுல்லாஹ், அன்சாரி, மரக்கடை காஜா மைதீன், மீரா மைதீன், காதர்பாட்சா, ஜாவீத், அன்வர் உள்பட கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.