திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளுவர் நகர் கோனார் தெருவில் இயங்கிவந்த முஸ்தபா மட்டன் கடையின் உரிமையாளர் முகமது முஸ்தபா (வயது 41) த| பெ. சையது அலி, 42, கோனார் தெரு, வள்ளுவர் நகர், திருவெறும்பூர் என்ற முகவரியில் வசிப்பவர்
மேற்படி கடையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பொழுது தனது கடையில் கோழிக்கறி மற்றும் மட்டன் கறி விற்பனை செய்து கொண்டு இருந்த முகமது முஸ்தபா மற்றும் சாதிக்கு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து முஸ்தபா மட்டன் கடையை
திருவெரும்பூர் வருவாய் ஆய்வாளர் சரவணன், திருவெறும்பூர் வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோரால் சீல் வைக்கப்பட்டது.