ஈராக் நாட்டின் சுலைமானி மாகாணத்தில் குர்திஸ்தான் பகுதியில் கத்ரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் முகமது மக்மூத்.
இவர் கூறும்பொழுது, கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் எங்களுடைய நிலத்தில் நான் பண்ணை விவசாயம் செய்து வருகிறேன்.
அதில் நீரோடையில் இரட்டை தலையுடன் உள்ள பாம்பு ஒன்று சென்றது. ஓடையில் நீர் அதிகம் இல்லை. அதனால், அதனை உயிருடன் பிடித்து கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றேன் என கூறியுள்ளார்.
இந்த வகை பாம்பு விஷமற்றது. 80 கிராம் எடையுடன், 8 அங்குலம் வரை வளர கூடியது என கூறப்படுகிறது.
முகமது எடுத்து சென்ற பாம்பு ஒரு வயதுக்கு குறைவாகவே இருக்கும். அவை நீர்வாழ் பாம்பு வகையை சேர்ந்தது. நீரிலும், நிலத்திலும் வாழ கூடிய தன்மை கொண்டது என்றாலும் அதிக வெப்ப நிலையை அவற்றால் ஏற்க முடியாது.
லட்சக்கணக்கான பாம்புகளில் ஒன்று என்ற கணக்கில் இரட்டை தலையுடன் கூடிய பாம்பு பிறக்கும்.
இவற்றுக்கு குறைவான ஆயுளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.