திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ….
திருச்சியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் அறிவித்தபடி, ஆளும் திமுக அரசின் நிர்வாக தோல்விகளை மறைக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் (22/07/24) திங்கள் அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறப் போகின்றது.
இதையொட்டி, திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம், மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரு, முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப_செந்தில்நாதன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில், அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க மக்கள் மீது வரிகளை சுமத்தும் போக்கினை கண்டித்து, தமிழகத்தின் முதல் தலைவராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வலியுறுத்திய, பொது செயலாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் திங்கள் 22-07-2024 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியான நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மக்கள் படும் இன்னல்களை, துயரங்களை வெளிப்படுத்த வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங், தலைமைக் கழக பேச்சாளர் நெல்லை லட்சுமணன், நிர்வாகிகள் கல்நாயக் சதீஷ்குமார், கம்ருதீன்,பெஸ்ட் பாபு,
இளையராஜா, உமாபதி, மதியழகன், சண்முகம், இளங்கோவன், குப்புசாமி, தண்டபாணி, சாந்தா, ஜான் கென்னடி, நாகூர் மீரான், நல்லம்மாள், கோமதி மங்கை, தருண் , கருணாநிதி, கைலாஷ், முகமது ஆரிஸ், லோக்நாத், பைசல், பழனிச்சாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.