திருச்சியிலிருந்து 15 பி.எஸ்.6 ரக புதிய பஸ்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.
திருச்சியிலிருந்து
15 பி.எஸ்.6 ரக புதிய பஸ்கள்
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.
திருச்சியில் இருந்து சென்னை, மதுரை, கரூர், கோவைக்கு புதிய பி.எஸ்.-6 ரக பேருந்துகள் துவக்கம் – அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி மாவட்டம் விளங்கி வருகிறது நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி வழியாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக பயணிகள் அதிகரிப்பு காரணமாக சென்னை , மதுரை , கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவையை அதிகரிக்கும் வகையில் திருச்சி மாவட்டத்திற்கு 90 புதிய பேருந்துகள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டிருந்தார்.
ஏற்கனவே 65 பேருந்துகள் வேவைகள் வழங்கி வந்த நிலையில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் சார்பாக பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்காக சென்னை , கோயம்புத்தூர் , மதுரை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 15 புதிய பி.எஸ். -6 ரக பேருந்துகள் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு , பள்ளி
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பி.எஸ்-6 ரக 15 புதிய பேருந்துகளை இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திர குமார், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, கிழக்கு மாநகர செயலாளரும்,மண்டல குழு தலைவருமான மதிவாணன் ,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,பகுதிச் செயலாளர் மோகன்தாஸ்,கவுன்சிலர்கள் காஜாமலை விஜய்,கலைச்செல்வி புஷ்பராஜ் மஞ்சுளா பாலசுப்பிரமணியன், விஜயாஜெயராஜ், ராமதாஸ்,திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன்,வட்ட செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,மார்சிங் பேட்டை செல்வம்,
அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் சிவசங்திரன் (கரூர்) துணை மேலாளர் ரங்கராஜன்(மனிதவள மேம்பாடு, கூட்டான்மை)துணைமேலாளர்கள்(
தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புகழேந்தி (வணிகம்) போக்குவரத்து கழக பணியாளர்கள் , கோட்ட மேலார்கள் ஜேசுராஜ்( புறநகர் ) சுரேஷ் பார்த்திபன் (நகரம்) கோட்டை மேலாளர் (பெரம்பலூர் ) ராமநாதன், மற்றும் அலுவலக பணியாளர் அலுவலக பணியாளர்கள்,அனைத்துதொழிற்சங்க பிரதிநிதிகள், அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்ஆகியோர் கலந்து கொண்டனர்.