கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ௹.5லட்சம்,மாதல் ரூ.2000 முழு கல்வி உதவித்தொகை.பிரணாய் விஜயன் அறிவிப்பு
கேரளாவில் இன்று 24 ஆயிரத்து 166 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 539 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 181 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கேரளாவில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் உடனடி நிவாரணமாகவும், அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாகவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பட்டம் பெறும் வரை அவர்களது கல்விச் செலவுகளை அரசே ஏற்று கொள்ளும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.