*சர்வதேச கபாடி மற்றும் தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சி விளையாட்டு வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது*
*நேபாள நாட்டில் சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபாடி மற்றும் தடகள விளையாட்டு போட்டி கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெற்றது*.
*இதில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த வீரர்கள் சரவணகுமார்* *வினோதனி 1,500 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்று திருச்சிக்கு பெருமை சேர்த்தனர்*.
*இதைபோல் கபாடி போட்டியில் கலந்து கொண்ட அருண் ,தீபன்ராஜ், விஜயகுமார் ஆகியோர் தங்கபதக்கம் வென்றனர் இதைபோல் திருச்சியை சேர்ந்த ஹரிஷ்ராகவேந்திரா (Takewondo)அர்ஜுன் (carrom விளையாட்டில்) தங்கம் வென்றனர் இவர்கள் ரயில் மூலமாக திருச்சிக்கு இன்று 4-05-2021 செவ்வாய் கிழமை வந்தடைந்தனர். ரயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.*
*இந்நிகழ்வில் சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் தினசேவை அறக்கட்டளை நிர்வாகி S.பகவதி தன்னார்வ மாற்றுத்திறனாளி சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம் தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்தியாராக்கினி மாற்றம் அமைப்பை சேர்ந்த மணிவேல் பிரவீன்ராஜ் அல்லிகொடி தினேஷ்குமார்,ரெங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்*
*முன்னதாக சரவணகுமார், அருண் இருவரும் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள நேபாள நாட்டிற்கு செல்வதற்கான செலவுத் தொகை இல்லாமல் உதவி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்*
*இவர்கள் போடட்டியில் கலந்து கொள்வதற்க்கு தேவையான உதவிதொகை மற்றும் உதவிகளை திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கிழக்கு தொகுதி வேட்பாளரும், ஆப்பிள் மில்லட் உணவக உரிமையாளருமான வீரசக்தி அவர்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது*