1.
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது.
இருசக்கர வாகனம் பறிமுதல் .
திருச்சி காந்தி மார்க்கெட் மதுரை ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதன் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் மதுரை ரோடு பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த இருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ராம்ஜி நகரை சேர்ந்த மனோஜ் குமார், பார்த்திபன் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்தது .
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
2.
குடும்பக் கட்டுப்பாடு செய்ய வந்தவர்
திருச்சி அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்து பெண் சாவு.
குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த இளம்பெண் திருச்சி அரசு மருத்துவமனை கருவறையிலேயே வலிக்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள இடையாற்றுமங்கலம் புது தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரது மகன் மகேஷ் இவரது இவரது மனைவி ரேவதி (வயது 29)
இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது மூன்று குழந்தைகள் இருப்பதால் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ய ரேவதி முடிவு செய்தார்.
அதற்காக நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார், அங்கு உள்ள கழிவறையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரது செல்போன் ஒலித்தது போனை எடுப்பதற்குள் எதிர்பாராதவிதமாக கழிவறையில் வழுக்கி விழுந்தார்.
இதனால் அவரது பின் மண்டையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருச்சி அரசு மருத்துவமனைக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்காக வந்தபின் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.